- இயேசுவின் பிள்ளை நான் இப்போதே
 வானோர் இன்பத்தைக் காண்பேன் இங்கே
 மீட்பர் மூலமாய் ஜீவன் பெற்றேன்
 ஆவியின் பேறாய்த் தூயன் ஆனேன்
- அன்பில் நிலைப்பேன், இன்பம் கொள்வேன்
 என்றும் இயேசுவை வாழ்த்தி நிற்பேன்
- இயேசுவைச் சேர்வேன் மெய்த் தொண்டனாய்
 மோட்சம் தோன்றுமே என் கண் முன்பாய்
 தூதரின் காட்சி என்னைத் தேற்றும்
 நாதரின் அன்பு கேட்டை மாற்றும்
- இயேசுவைச் சேர்வேன் நேர் அன்பனாய்
 என்றும் சீவிப்பேன் பேரின்பனாய்
 கண்ணாய் நோக்குவேன் விண்ணோர் வாழ்வை
 மேலாய்த் தேடுவேன் மீட்பின் ஈவை
Genre: Hymn
Language: Tamil
Book: New Song 1 Page 38
Translations: Blessed assurance; යේසුස් මගේ යයි
Download slides: PDF