பிதாவே ஆழி சூழும்

 1. பிதாவே ஆழி சூழும்
  ஆனந்த அணியாம்
  தீவுகள் காத்து நிற்க
  வாக்குகள் அளித்தீர்
  உம் வாக்காம் ஆசீர்வாதம்
  எம் தீவில் திகழ்வரை
  சாமக்காரராம் நாங்கள்
  ஆறுதல் அடையோம்
 2. வல்ல தேவா இத்தீவின்
  தேவை நிறைவுற
  ஆசீர்வதியும் பசும்
  கிராமம் விண்மலை
  அகவளர் மருங்கு
  தாழ் சமதரை வாழ்
  தம் புதல்வர்களுறும்
  அருளில் ததும்பவே
 3. எல்லையில் சமாதானம்
  தொல்லையில் நல்லன்பு
  மானிடரிடை பிரியம்
  நீணிலம் சேர்த்திடும்
  காவலர் காக்கப்படுவோர்
  தாழ்மை நன்றி நிறை
  சேவையிலாகுக எம்
  நாதன் வருந் துணையே
 4. எம் தேசம் அவர் பக்கம்
  செவியைச் சாய்க்குமே
  அவரின் முன் பணிவோம்
  அவர் புயம் ஆளுகை
  பாவம் அவர் பாதங் கீழ்
  மகிமை முடிவாம்
  நாதன் வரும் வழிகண்டு
  நயனம் நயந்திடுமே

Genre:

Language:

Book: Page 39

Translations: Hymn for Ceylon; සමිඳූනි දිවයින්

Download slides: PDF

Download sheet music: SATB

Watch:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.